Île-de-France : உள்ளூர் கோழிகளின் முட்டைகளை உண்ணவேண்டாம் என அறிவுறுத்தல்!!
20 கார்த்திகை 2023 திங்கள் 13:16 | பார்வைகள் : 5089
இல் து பிரான்சுக்குள் வசிக்கும் மக்கள் உள்ளூர் பண்ணைகளில் உற்பத்தியான முட்டைகளை உண்ணவேண்டாம் என பிராந்திய சுகாதாரப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இல் து பிரான்சுக்குள் உள்ள 25 பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சோதனைக்குட்படுத்தியதில், முட்டைகளில் ”organic pollutants” என அழைக்கப்படும் கரிம மாசுபடுத்திகள் நிறைந்திருப்பதாகவும், இது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது எனவும் தெரியவந்தது. குறிப்பாக சிறுவர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் மற்றும் அதன் புறநகர்கள் மற்றும் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் உண்பதை தவிர்க்கும் படி l'Agence régionale de santé அறிவுறுத்தியுள்ளது.