Chelles : காவல்துறை வீரரை மோதித்தள்ளிய மகிழுந்து! - இளைஞன் கைது!

20 கார்த்திகை 2023 திங்கள் 15:27 | பார்வைகள் : 6033
காவல்துறை வீரர் ஒருவரை மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர் இச்சம்பவம் Chelles நகரில் இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நள்ளிரவு 1.30 மணி அளவில், அதிவேகமாக பயணித்த மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தினர். ஆனால் மகிழுந்து காவல்துறை வீரர் ஒருவரை மோதித்தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
மகிழுந்துக்குள் சிக்கிய காவல்துறை வீரருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அதேவேளை, மேற்படி தாக்குதலில் ஈடுபட்டு, சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய 18 வயதுடைய இளைஞன் காவல்துறையினரால் தேடப்பட்டார். பின்னர் இன்று அதிகாலை அளவில் அவர் Torcy நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1