Paristamil Navigation Paristamil advert login

டிசம்பர் முதலாம் திகதி முதல் அரச உதவிப் பணம் சகலருக்கும் சமமாக 600 யூரோக்கள். ஒற்றுமை மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சர்.

டிசம்பர் முதலாம் திகதி முதல் அரச உதவிப் பணம் சகலருக்கும் சமமாக 600 யூரோக்கள். ஒற்றுமை மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சர்.

20 கார்த்திகை 2023 திங்கள் 19:00 | பார்வைகள் : 7034


குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட 41% சதவீதமான பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறும போது கையில் சிறிய பைகளோடு வெளியேறுகின்றனர், அல்லது வெளியேற்றப் படுகின்றனர். இவர்களின் வாழ்வு,  தம்மை தனி வாழ்க்கைக்கு தயாராகும் வரை பொருளாதார ரீதியாக மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதனை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் எனும் வேண்டுகோள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இன்று ஒற்றுமை மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சர் Aurore Bergé "வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் சகல குடும்ப வன்முறையால் பாதிக்கபட்டவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு அவசரகால நிதியுதவியாக 600 யூரோக்கள் அரசினால் Caisses d'allocations familiales மூலம் வழங்கப்படும், அதற்கு பாதிக்கப்பட்டவர் சரியான அடையாள பத்திரங்களை வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் சமர்ப்பிக்கும் பத்திரங்கள் விரைவாகவும, ஆழமாகவும் ஆராயப்பட்டு, உண்மைத்தன்மையின் அடிப்படையில் குறித்த அவசரகால நிதியுதவி தற்காலிகமாக வழங்கப்படும் எனவும், பின்னர் அவரின் பொருளாதார நிலைமைகளை கணக்கில் கொண்டு வழங்கப்படும் உதவியானது கணக்கிடப்படும் எனவும் தெரியவருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்