வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

22 கார்த்திகை 2023 புதன் 12:39 | பார்வைகள் : 6136
வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இளைஞர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அப்பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர் தனது பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் சடலம் அடுக்குமாடி குடியிருப்பின் பின் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1