Bobigny : பாடசாலைக்கு கொக்கைன் போதைப்பொருள் எடுத்துவந்த மாணவன்!!

22 கார்த்திகை 2023 புதன் 20:15 | பார்வைகள் : 16939
CM2 மாணவன் ஒருவன் தனது பாடசாலைக்கு கொக்கைன் போதைப்பொருளை எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
Bobigny (Seine-Saint-Denis) நகரில் உள்ள Paul Langevin பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை இடைவேளை நேரத்தின் போது குறித்த மாணவன் தனது புத்தகப்பையில் இருந்து குறித்த கொக்கைன் போதைப்பொருள் பொதியை வெளியே எடுத்துள்ளான். இதனைக் கண்காணித்த ஆசிரியர், உடனடியாக அதனை பறித்து எடுத்துக்கொண்டுள்ளார். பின்னர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
குறித்த பொருள் என்னவென தெரியாத குறித்த மாணவன், அதனைத் தமது வீட்டின் தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றின் கீழே இருந்து கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளான். காவல்துறையினர் உடனடியாக குறித்த மாணவனின் வீட்டுக்குச் சென்று அங்கு சோதனை நடத்தினர். ஆனால் அங்கிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை.
குறித்த மாணவனின் பெற்றோர்களை காவல்துறையினர் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1