இன்னும் 2 ஆண்டுகளில் சந்திரயான்-4 ஏவப்படும்
23 கார்த்திகை 2023 வியாழன் 12:28 | பார்வைகள் : 2753
இன்னும் இரு ஆண்டுகளில் சந்திரயான் 4 ஏவப்படும் என இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் 'விக்ரம்' லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது
அடுத்த கட்டமாக ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான்-4 திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. சந்திரயான்-4 திட்டம் லூபெக்ஸ் எனும் பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்துள்ளதாவது, சந்திரயான்-4 திட்டத்தில் லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்க உள்ளன. . இது முந்தைய திட்டங்களைவிட சவாலானதாகும். ஏனெனில், விண்கலத்தை நிலவில் தரையிறக்கி மாதிரிகளைச் சேகரித்து, பின்னர் மீண்டும் பூமிக்குக் கொண்டுவர வேண்டும். இதற்காக 4 விதமான கலன்கள் விண்கலத்தில் இணைக்கப்பட உள்ளன.
ரோபோட் தொழில்நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்வதுடன், அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.