Paristamil Navigation Paristamil advert login

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம்

23 கார்த்திகை 2023 வியாழன் 07:34 | பார்வைகள் : 5043


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வைத்து 13வது உலக கோப்பை போட்டி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இதன் இறுதிப் போட்டியில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி 6 முறையாக உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

லீக் போட்டிகள், அரையிறுதி போட்டி என அனைத்திலும் தோல்வியே காணாத அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியுடன் முதல் தோல்வியை சந்தித்து உலக கோப்பை தவறவிட்டது.

இந்த உலக கோப்பையை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்களுக்காக வெற்றி பெறுவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்த நிலையில், அது பொய்த்து போனது.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது.

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் பதவி விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், ராகுல் டிராவிட் அதை நீட்டித்து தொடர  விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ராகுல் டிராவிட் தனது பதவியை தொடராத பட்சத்தில் அந்த பொறுப்பை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ் லட்சுமணன் ஏற்பார் என தெரியவந்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்