ஹீரோவாக அறிமுகமாகும் விஜய்சேதுபதி மகன்

23 கார்த்திகை 2023 வியாழன் 15:55 | பார்வைகள் : 6139
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் புதிய படத்தின் பூஜை நாளை சென்னையில் நடக்கிறது.
பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறையில் அடியெடுத்து வைப்பது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். ஆனால், இப்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கக்கூடிய ஹீரோக்களின் வாரிசுகள் தங்களது அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் படங்கள் நடித்து வருகிறார். நடிகர் விஜயின் மகன் ஜேசன் விஜய் லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் பிக் பாஸ் கவின் கதாநாயகனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் இந்தப் படத்திற்கான பூஜை நாளை(நவ.24) சென்னை, ஏவிஎம் ஸ்டுடியோஸில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு விஜய்சேதுபதியுடன் சூர்யா ஒருசில படங்களில் நடித்திருக்கிறார். இப்போது கதாநாயகனாக அவர் களமிறங்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
5 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025