சோதனைக்கு உட்பட மறுப்பு -காவற்துறை வீரனை மோதியெறிந்த வாகனம்!!

23 கார்த்திகை 2023 வியாழன் 17:21 | பார்வைகள் : 14252
மீண்டும் ஒரு சோதனைக்கு உட்பட மறுப்பும், காவற்துறையின் மீதான தாக்குதலும் நடந்துள்ளது.
நேற்று புதன்கிழமை 21h30 மணியளவில் இந்தச் சம்பவம் தூர்க்குவான் (Tourcoing) நகரில் நடந்துள்ளது.
வீதிச் சோதனை நடந்த சமயம், அந்த வீதியால் நடந்து சென்ற நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில், காவற்துறையினர் சோதனை செய்ய நிறுத்தி உள்ளனர்.
காவற்துறையினரின் ஆனைக்கு இணங்காமல், அங்கிருந்து தப்பியோடிய நபர், அருகில் நின்ற தனது சிற்றுந்தில் ஏறி அதனைச் செலுத்தி, அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த இரு காவற்துறையினரில் ஒருவரை, மோதியெறிந்துள்ளார்.
.மோதியெறியப்பட்ட இந்த வீரர், அருகில் மூடப்பட்டிருந்த ஒரு வர்த்தகநிலையத்தில் இரும்புக் கதவுடன் மோதி தலை அடிபட வீழ்ந்துள்ளார்.
பெல்ஜிய எல்லையை அண்டி உள்ள இந்தப் பகுதியில் போதைப்பொருள் தடுப்பிற்காக வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த CRSஅதிரடிப்படை வீரனே, இப்படி படுகாயமடைந்துள்ளார்.
மோதியெறிந்த குற்றவாளி தப்பியோடி உள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1