வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் இலங்கைக் குழந்தைகள்

24 கார்த்திகை 2023 வெள்ளி 08:34 | பார்வைகள் : 6518
இலங்கையில் உள்ள குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது.
இந்த பாரிய மனித கடத்தலை மேற்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் கண்டி பிரதேசத்தில் இருந்து செயற்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பித்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம், தொடர்பில் இலங்கையை சேர்ந்த நோர்வே பிரஜை ஒருவரால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1