இன்று - பரிஸ் மற்றும் புறநகரில் உறை குளிர்!

25 கார்த்திகை 2023 சனி 06:00 | பார்வைகள் : 8654
தலைநகர் பரிஸ் மற்றும் புறநகரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இல் து பிரான்சின் பல்வேறு நகரங்களிலும் உறை குளிர் பதிவாகியுள்ளது.
இந்த வார இறுதியில் இருந்து பருவகால குளிர் ஆரம்பமாகுவதாக வானிலை அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 8 இல் இருந்து 10°C வரை வெப்பம் குறைந்துள்ளது.
தலைநகர் பரிசில் இன்று காலை 4°C வரை குளிர் உணரப்பட்டது. Bordeaux நகரில் 4°C குளிரும், Strasbourg நகரில் 3°C குளிரும், Bourges நகரில் 1°C குளிரும், Aurillac நகரில் -1°C குளிரும் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக பிரான்சின் வடக்கு பகுதில் கடும் உறை குளிர் படஹிவாகும் எனவும் அங்கு -10°C வரை குளிர் நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.