Paristamil Navigation Paristamil advert login

விண்வெளிக்கு செல்கிறது மரத்தாலான செயற்கைக்கோள்

விண்வெளிக்கு செல்கிறது மரத்தாலான செயற்கைக்கோள்

27 கார்த்திகை 2023 திங்கள் 15:08 | பார்வைகள் : 2340


விண்வெளிக்கு உகந்ததாக விண்வெளி பயணத்தை மேற்கொள்ள நாசாவும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து உலகிலேயே முதன்முறையாக மரத்தால் செய்யப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளன.

மாக்னோலியா மரத்தால் ஆன லிக்னோசாட் செயற்கைக்கோள் ஒரு தேநீர் கோப்பையின் அளவு கொண்டது.நாசா மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் இந்த செயற்கைக்கோளை அடுத்த ஆண்டு கோடையில் பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிட்டுள்ளன.

விண்வெளியில் மரம் எரியாவிட்டாலும், பூமிக்கு திரும்பும்போது அது எரிந்து சாம்பலாக மாறும்.

எதிர்காலத்தில், செயற்கைக்கோள்கள் தயாரிக்க மரம் வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்று நாசா மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்