Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் : மொழிபெயர்ப்பு செயலி ஒன்றை உருவாக்கும் RATP!

ஒலிம்பிக் : மொழிபெயர்ப்பு செயலி ஒன்றை உருவாக்கும் RATP!

27 கார்த்திகை 2023 திங்கள் 17:20 | பார்வைகள் : 6263


ஒலிம்பிக் போட்டிகளுக்காக தொடருந்து நிறுவனமான RATP, ஒரு மொழிபெயர்ப்பு செயலி ஒன்றை உருவாக்கி வருகிறது.

ஒலிம்பிக் போட்டிகளைக் காண பல நாடுகளில் இருந்து பரிசுக்கு பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான போக்குவரத்து உதவிகளை வழங்க, RATP ஊழியர்கள் சிரமப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு, மேற்படி செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலாப்பயணிகள் தங்களது தாய் மொழியில் கேட்கும் கேள்விகளுக்கு RATP ஊழியர்கள் தங்களது செயலி ஊடாக அதனை மொழி பெயர்த்து அதற்குரிய பதிலை அவர்களது மொழியிலேயே தெரிவிக்க முடியும்.

இந்த செயலியை உருவாக்க இரண்டு மில்லியன் யூரோக்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், பயனுள்ள இந்த செயலியை உருவாக்குவது குறித்து பொதுமக்கள் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்