ஒலிம்பிக் போட்டிகளின் போது - இரண்டு மடங்காக அதிகரிக்கும் மெற்றோ கட்டணம்!
27 கார்த்திகை 2023 திங்கள் 19:40 | பார்வைகள் : 4614
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம் முழுவதும் மெற்றோ பயணச்சிட்டைகளின் விலை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் மற்றும் பாரா-ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று முடியும் வரை (செப்டம்பர் 8) மெற்றோ கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என Île-de-France Mobilités அறிவித்துள்ளது.
ஒரு பயணத்துக்கான மெற்றோ பயணச்சிட்டை 2.10 யூரோக்களுக்கு பதிலாக 4 யூரோக்களுக்கும், நாள் ஒன்றுக்கான பயணக்கட்டணம் 8 யூரோக்களுக்கு பதிலாக 16 யூரோக்களும், வாராந்த பயணக்கட்டணம் 35 யூரோக்களுக்கு பதிலாக 70 யூரோக்களுக்கும் விற்பனையாகும்.
அதேவேளை, RER கட்டணங்களும் சராசரியாக 6 யூரோக்களால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.