தாயும் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்பு!!

27 கார்த்திகை 2023 திங்கள் 21:00 | பார்வைகள் : 10653
Doubs நகரில் வசிக்கும் பெண் ஒருவரும் அவரது 7 வயதுடைய இரட்டை பெண் பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை இச்சடலங்கள் Grand'Combe-Châteleu (Doubs) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து ஜொந்தாமினர்களால் மீட்கப்பட்டுள்ளன. 7 வயடைய இரட்டைச் சகோதரிகள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என அவர்களின் தந்தைக்கு (விவாகரத்தான பெற்றோர்கள்) ஆசிரியர் அறிவித்துள்ளார்.
அதையடுத்து சிறுமிகளின் தந்தை அவர்களது வீட்டுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். வீடு பூட்டி இருந்துள்ளது. அங்கு சூழ்நிலை சரியில்லை என்பதை உணர்ந்த அவர் ஜொந்தாமினரை அழைத்தார்.
பின்னர் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறக்கப்பட்டது. வீட்டுக்குள் அவரது 51 வயதுடைய முன்னாள் மனைவியும், ஏழு வயதுடைய இரட்டைச் சிறுமிகளும் சடலமாக கிடந்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. சடலங்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1