உதயநிதி உயர்வுக்கு பொருத்தமானவர்! : துரைமுருகன் பேச்சு

28 கார்த்திகை 2023 செவ்வாய் 08:35 | பார்வைகள் : 6684
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளதாவது:
மறைந்த தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் நிறைய பரிட்சைகள் வைப்பார். அவற்றில், அவர் தேறிய பின்தான் உயர்வு அளிப்பார். அப்படித்தான், கட்சியின் இளைஞர் அணி செயலராக, துணைப் பொதுச் செயலராக, பொருளாளராக, செயல் தலைவராக, தலைவராக உயர்வு பெற்றார்.
நிர்வாகப் பொறுப்பிலும் மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக படிப்படியாக உயர்த்தப்பட்டார். தற்போது முதல்வராகி இருக்கிறார். அந்த வகையில், உதயநிதியும் போட்டியின்றி அனைவர் மனதிலும் நிறைந்திருக்கிறார். அவருக்கான உயரங்களும் விரைவில் போட்டியின்றி, அவருக்கு தானாகவே வந்து சேரும்.
அவரது உழைப்பு என்பது சாதாரணமானது அல்ல. தந்தையை போல மகனும் உழைப்பு உழைப்பு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கருணாநிதி ஒருமுறை என்னிடம், பேரனின் புத்திக் கூர்மை மற்றும் அவர் பின்பற்றும் கொள்கை குறித்து வியந்து பாராட்டினார். அப்படி கருணாநிதியால் அன்றைக்கே அடையாளம் காட்டப்பட்டவர் தான், உதயநிதி; உயர்வுக்கு பொருத்தமானவர்.
இவ்வாறு அவர் பேசியுள்ளதாக தெரிகிறது
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1