எகிப்த்தைச் சென்றடைந்து பிரெஞ்சு மருத்துவக்கப்பல்!
28 கார்த்திகை 2023 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 2844
பிரான்சில் இருந்து காஸா பகுதிக்கு அனுப்பபட்ட பிரெஞ்சு மருத்துவக்கப்பல், தற்போது எகிப்த்தினைச் சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இத்தகவலை அறிவித்துள்ளார்.
Dixmude எனும் இந்த கப்பல் ஒரு உலங்குவானூர்தி தாங்கி கப்பல் ஆகும். பிரெஞ்சு இராணுவத்தினருக்கு சொந்தமான குறித்த கப்பல் முழுவதும் மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் தாங்கிக்கொண்டு காஸா நோக்கி சென்றுகொண்டுள்ளது. காஸா கடற்பகுதிக்கு அருகே நிலைகொண்டு, போரினால் பாதிக்கப்பட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கப்பல் எகிப்த்தைச் சென்றடைந்ததை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேற்படி கப்பல் காஸா பகுதிக்கு பிரான்ஸ் அனுப்பியுள்ள இரண்டாவது கப்பலாகும். முன்னதாக அனுப்பப்பட்ட Tonnerre எனும் கப்பல் கிழக்கு மத்திய தரைக்கடலில் நிலைகொண்டுள்ளது.