இஸ்லாமிய பாடசாலை ஒன்றின் அனுமதியை இரத்துச் செய்ய ஆதரவு!!

28 கார்த்திகை 2023 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 8237
Lille நகரில் உள்ள Averroes எனும் உயர்கல்வி இஸ்லாமிய பாடசாலை ஒன்றின் ஒப்பந்தத்தை இரத்துச் செய்து குறித்த பாடசாலையை நிரந்தரமாக மூடுவதற்குரிய முடிவொன்று எட்டப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 400 வரையான இஸ்லாமிய மாணவர்கள் பயில்கின்றனர். 2003 ஆம் ஆண்டு கட்டார் செல்வந்தர் ஒருவரால் நிதி அளிக்கப்பட்டு (கிட்டத்தட்ட ₤900,000 யூரோக்கள்) பாடசாலை அமைந்துள்ள கட்டிடம் வாங்கப்பட்டது. அங்கு ஆன்மீக போதனைகள் மற்றும் நிர்வாக மேலாண்மை முறைகேடுகளும், சர்ச்சைக்குரிய மதப்பணிகளும், அடிப்படைவாதமும் பயிற்சிவிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பாடசாலை ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, அதனை மூடுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது தொடர்பாக பாடசாலை இயக்குனரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. Nord மாவட்டத்தின் தலைமை காவல்துறை அதிகாரி விரைவில் அது தொடர்பாக முடிவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.