பப்புவா நியூ கினியாவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்

28 கார்த்திகை 2023 செவ்வாய் 10:15 | பார்வைகள் : 5508
பப்புவா நியூ கினியாவின் வடக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளது.
இந் நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
பசிபிக் தீவு மாநிலத்தின் கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகரான வெகாக் நகரத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் 12 கிலோமீட்டர் (ஏழு மைல்) ஆழத்தில் இன்று காலை 8:46 மணிக்கு கண்டறியப்பட்டதாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக "சுனாமி அச்சுறுத்தல் இல்லை" என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.