Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : அகதிகள் வெளியேற்றம்!!

பரிஸ் : அகதிகள் வெளியேற்றம்!!

31 ஐப்பசி 2023 செவ்வாய் 15:56 | பார்வைகள் : 9474


பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த அகதிகள் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது.

Ourcq கால்வாய் அருகே சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த நிலையில், இன்று காலை அங்கு வருகை தந்த காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் அகதிகளை அங்கிருந்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். மொத்தமாக 136 பேர் வெளியேற்றப்படிருந்தனர். அவர்களில் 90 பேர் இல் து பிரான்சுக்குள் உள்ள பல்வேறு அகதிகள் பாதுகாப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 46 பேர் இல் து பிரான்சுக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

இது இவ்வருடத்தில் பரிசில் இடம்பெறும் 31 ஆவது வெளியேற்றமாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்