Paristamil Navigation Paristamil advert login

சியாரா புயல்! - மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! - 3,200 தீயணைப்பு படையினர் களத்தில்...

சியாரா புயல்! - மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! - 3,200 தீயணைப்பு படையினர் களத்தில்...

1 கார்த்திகை 2023 புதன் 07:00 | பார்வைகள் : 4378


கடந்த இரு நாட்களாக பிரான்சின் வடக்கு பகுதிகளில் மையம் கொண்டுள்ள புயல், இன்று புதன்கி24 ழமை நள்ளிரவு கரையைக் கடக்கிறது. பிரான்சின் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 17 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Manche,
Côtes-d'Armor,
Finistère,

ஆகிய மூன்று வட மாவட்டங்களுக்கும் ‘அதிகபட்ச’ எச்சரிக்கையான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 180 கி.மீ வேகம் வரை புயல் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மாலை முதல், நாளை வியாழக்கிழமை காலை 10 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்சின் வடக்கு, வட மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2,300 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிரான்சில் 1999 ஆம் ஆண்டின் பின்னர் பாரிய அளவு புயல் தற்போது பிரான்சை தாக்க உள்ளதாகவும், கடல் அலை 10 மீற்றர் வரை உயரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த மாவட்டங்களில் வசிப்பவர்கள், புயல் எச்சரிக்கை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்