பரிஸ் : மகிழுந்துக்குள் இருந்து எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

1 கார்த்திகை 2023 புதன் 18:00 | பார்வைகள் : 14025
மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து எரிந்த நிலையில், சடலம் ஒன்றினை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள rue du Disque வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கட்டிடம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் நின்ற மகிழுந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் தலையிட்டு தீயினை அணைத்தனர்.
தீ அணைக்கப்பட்டதும் மகிழுந்துக்குள் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதை தீயணைப்பு படையினர் அவதானித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.