பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் பலி...
.jpg)
2 கார்த்திகை 2023 வியாழன் 08:40 | பார்வைகள் : 6456
அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட இரண்டாவது நபர், 40 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி அமெரிக்க முன்னாள் கடற்படை வீரரான லாரன்ஸ் பேசட், 58, என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தியது அறுவைச் சிகிச்சை முடிந்த நிலையில் அன்றாடப் பணிகளை லாரன்ஸ் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏற்கனவே, கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி இதே மருத்துவமனை டேவிட் பெனட் என்பவருக்கு முதன்முறையாக பன்றியின் இதயத்தை பொருத்தி சாதனை படைத்தது.
எனினும், அவரும் இதயத்தை பொருத்தி இரண்டு மாதங்களில் உயிரிழந்த நிலையில், இதயம் பொருத்தப்பட்ட இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளார்.