இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு - மோசடியில் சிக்கும் மக்கள்
2 கார்த்திகை 2023 வியாழன் 09:44 | பார்வைகள் : 3646
பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டு வேலை மோசடிகள் ஊடாக பொதுமக்களிடமிருந்து 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் நிதி மோசடி செய்த சந்தேக நபர் தேடப்பட்ட வந்த நிலையில், பொலன்னறுவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக சிலாபம், கணேமுல்ல, வெலிக்கடை, மீகொட, ஆனமடுவ, கடவத்தை, பிலியந்தலை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் இருந்து 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபருக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் குறைந்தது 10 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, பாணந்துறை மேல் நீதிமன்றத்தினால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.