Paristamil Navigation Paristamil advert login

லியோ வெற்றி விழா – விஜய்யின் குட்டி ஸ்டோரி

லியோ வெற்றி விழா – விஜய்யின் குட்டி ஸ்டோரி

2 கார்த்திகை 2023 வியாழன் 11:33 | பார்வைகள் : 6519


நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று (நவம்பர் 1) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த வெற்றிவிழா நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், திரிஷா, மன்சூர் அலிகான் மற்றும் தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மிஸ்ஸான குட்டி ஸ்டோரியை தற்போது லியோ படத்தின் வெற்றி விழா மேடையில் கூறினார் விஜய்.

அவர் கூறியதாவது, ஒரு குட்டிப் பையன் ஆசையா அவன் அப்பாவோட சட்டைய எடுத்துட்டு போட்டுக்குவான், அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான்,  அப்பாவோட சேர்ல ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த சட்டை அவனுக்கு செட் ஆகாது, தொள தொளன்னு இருக்கும். வாட்ச் கையிலேயே நிக்காது. அந்த சேர்ல உட்காரலாமா? வேண்டாமா? தகுதி இருக்கா? இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை, அப்பா மாதரி ஆகணும்னு கனவு. அதில் என்ன தவறு? அதனால பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது.  என செம மாஸான குட்டி ஸ்டோரியை தனது ரசிகர்களுக்கு கூறி உற்சாகப்படுத்தினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்