நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்..

2 கார்த்திகை 2023 வியாழன் 11:35 | பார்வைகள் : 9825
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜூனியர் பாலையா இன்று காலமானார். 60களின் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த பாலையாவின் மூன்றாவது மகன் தான் இவர். இவருடைய உண்மையான பெயர் ரகு. முகம், உடலமைப்பு, குரல் எல்லாமே அவருடைய அப்பா பாலையா போல் இருந்ததால் சினிமாவுக்காக இவர் தன்னுடைய பெயரை ஜூனியர் பாலையா என வைத்துக்கொண்டார்.
காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிய இவர் 1975 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மேல்நாட்டு மருமகள் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி காட்சிகளில் நடித்த இவருக்கு ரசிகர்களிடையே நல்ல அடையாளம் கிடைத்தது. அதன் பின்னர் ஜெயம், வின்னர், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சமுத்திரகனி நடித்த சாட்டை படத்தில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் கேரக்டரில் இவர் நடித்திருப்பார். ஜூனியர் பாலையா காமெடி கேரக்டரில் மட்டுமல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களிலும் நடிக்க கூடியவர் என நிரூபித்த படம் இது. இறுதியாக 2021 ஆம் ஆண்டு ரிலீசான என்னங்க சார் உங்க சட்டம் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
அதன் பின்னர் வேறு எந்த தமிழ் படங்களிலும் ஜூனியர் பாலையா நடிக்கவில்லை. இன்று அதிகாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். இவருடைய வயது 70. ஜூனியர் பாலையாவின் மரணத்திற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவருடைய உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரின் சொந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1