Paristamil Navigation Paristamil advert login

திருமண உறவில் இடைவெளி அவசியம்... ஏன் தெரியுமா..?

திருமண உறவில் இடைவெளி அவசியம்... ஏன் தெரியுமா..?

2 கார்த்திகை 2023 வியாழன் 12:02 | பார்வைகள் : 2206


திருமணம் செய்யும்போது கணவன் - மனைவி இருவரும் என்றென்றைக்கும் ஒற்றுமையாக, நகமும், சதையும் போல இணை பிரியாமல் வாழ வேண்டும் என்று நண்பர்களும், உறவினர்களும் வாழ்த்துவது சரிதான். ஆனால், பழகப், பழகப் பாலும் புளிக்கும் என்பதைப் போலவே இணைந்தே இருப்பதால் உங்களுக்கே தெரியாமல் சலிப்பு உணர்வு மேலோங்கக் கூடும்.

பெரிய காரணம் எதுவுமின்றி மூர்க்கத்தனமாக ஏற்படுகின்ற சண்டைகள், வாழ்க்கைத் துணை மீதான வெறுப்புணர்வு போன்றவை உங்களுக்கு திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுகிறது என்பதற்கான அறிகுறிகள் ஆகும். இதையெல்லாம் சரி செய்து, நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றால் உங்கள் பந்தத்தில் ஒரு இடைவெளி தேவை. ஆம், ஒரு பாஸ் பட்டன் தேவைப்படுகிறது.

ஏன் இடைவெளி தேவை : திருமண பந்தத்தில் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாக அந்த பந்தம் எவ்வளவு தூரம் பலம் அடைகிறது என்பதை ஆராயும் முன்பாக, இந்த இடைவெளி ஏன் தேவைப்படுகிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை மிக இறுக்கமானது. இதில் நம்முடைய வேலை, குடும்பம் மற்றும் இதர பொறுப்புகள் என்று நாம் ஏராளமான விஷயங்களை சமாளிக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு இடைவெளி உங்களை புதுப்பித்துக் கொள்ள உதவும்.

விதிமுறைகள் : ஒரு சின்ன இடைவெளி எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமைந்துவிடாது. எதை எல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை நாம் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். தற்போதைய அதிருப்தியை மேலும் அதிகப்படுத்தி விடாத வண்ணம் இடைவெளியை எப்படி கடைப்பிடிப்பது என்பதற்கான விதிமுறைகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம்.

.நம்மை மீட்டுருவாக்கம் செய்வது : திருமண வாழ்க்கையில் இடைவெளி விடுவது என்பது பிளவை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்று அர்த்தம் அல்ல. உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்பை அது ஏற்படுத்திக் கொடுக்கும். அதேபோல உங்கள் வாழ்க்கைத் துணையும் தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்ளலாம்.

உரையாடல் மிக முக்கியம் : இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்து விட்டால் அதை உங்கள் பார்ட்னருக்கு புரியும்படி எப்படி எடுத்துச் சொல்லப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமானது. உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படையாக எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருவருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து நீங்கள் விளக்கமளிக்க வேண்டும்.

மீண்டும் ஒளிவிளக்கு : மிகச் சரியான முறையில் எவ்வித பிரச்சினையும் இன்றி நீங்கள் இடைவெளியை கடைப்பிடித்து முடித்தால் தம்பதியர்கள் இடையிலான நெருக்கம், அன்பு மற்றும் அன்யோன்யம் ஆகியவை அதிகரிக்கும். மிக ஆழமான உரையாடல்கள், வெளியிடங்களில் சுற்றுவது என்று உங்கள் பந்தத்தை மீண்டும் அதிகரித்துக் கொள்ளலாம்.

முன்னோக்கிச் செல்வது : நீங்கள் எடுத்துக் கொள்ளும் இடைவெளி என்பது முடிவல்ல, அது மற்றொரு தொடக்கத்திற்கான ஆரம்பப் புள்ளி. நிச்சயமாக அந்த இடைவெளி உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதை நோக்கி நீங்கள் பயணம் செய்வீர்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்