நீண்டநாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்...
2 கார்த்திகை 2023 வியாழன் 12:08 | பார்வைகள் : 3304
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் லியோ.
இந்த திரைப்படம் கடந்த மாதம் 19ஆம் திகதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும்,வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.
தற்போது வரை "லியோ" திரைப்படம் இந்திய மதிப்பில் 540 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ள நிலையில்,படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில்,நேற்று வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய்,இரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல்,கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பற்றி எரிந்துகொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதாவது ," புரட்சி தலைவர் என்றால் ஒருவர் தான்,நடிகர் திலகம் என்றால் ஒருவர் தான், புரட்சி கலைஞர் என்றால் ஒருவர் தான்.அதே மாதிரி உலகநாயகன் என்றால் ஒருவர் தான்,சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர் தான்.தல என்றால் ஒருவர் தான்" என்று தெரிவித்தார்.மேலும் "தளபதி" குறித்து பேசிய விஜய்,"என்னை பொறுத்தவரை தளபதி என்பவர்,மன்னர்கள் சொல்வதை செய்து முடிப்பவர்.
எனக்கு மன்னர்கள் மக்களாகிய நீங்கள் தான்.நீங்கள் சொல்லுங்கள்,நான் செய்து முடிக்கிறேன்,"என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் நீண்டநாளாக இருந்த சர்ச்சைக்கு தற்போது தளபதி விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.