மீண்டும் பணியை ஆரம்பிக்கவுள்ள சந்திரயான்-3: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு
2 கார்த்திகை 2023 வியாழன் 12:28 | பார்வைகள் : 2343
அணுசக்தியின் உதவியுடன், சந்திரயான்-3 இன் உந்துவிசை தொகுதி அடுத்த பல ஆண்டுகளுக்கு சந்திரனைச் சுற்றிக்கொண்டே இருக்கும் என்ற தகவல் வெளியாகி இருகின்றது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.
இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஆகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து தனது பணியையும் வெற்றிகரமாக செய்து வந்தது. இதையடுத்து நிலவின் காலநிலை மாற்றத்தின் காரணமாக விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு சந்திரயான் பற்றிய எந்தவொரு தகவலும் இஸ்ரேலுக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் அணுசக்தியின் உதவியுடன், சந்திரயான்-3 இன் உந்துவிசை தொகுதி அடுத்த பல ஆண்டுகளுக்கு சந்திரனைச் சுற்றிக்கொண்டே இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திரயான்-3 இன் உந்துவிசை தொகுதி அடுத்த பல ஆண்டுகளுக்கு சந்திரனைச் சுற்றிக்கொண்டே இருக்கும்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று நிலவில் தரையிறங்கியது. இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஆகஸ்ட் 17 அன்று, உந்துவிசை தொகுதி சந்திரயானில் இருந்து பிரிந்தது.
ஆரம்பத்தில், அதன் ஆயுள் 3 முதல் 6 மாதங்கள் என்று கூறப்பட்டது. இப்போது, அணுசக்தி உதவியுடன், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படும் என்று கூறப்படுகிறது.
பூமியில் நிலவு பற்றிய முக்கிய தகவல்களை இஸ்ரோ தொடர்ந்து பெறும்.
இந்தியாவின் சந்திரன் பயணம் தொடங்கப்பட்டபோது, இந்த தொகுதியில் 1,696 கிலோ எரிபொருள் இருந்தது. அதன் உதவியுடன் சந்திரயான் முதலில் பூமியை ஐந்து முறை சுற்றி வந்தது. பின்னர், அது சந்திரனை ஆறு சுற்றுகள் சுற்றியது.
இந்தியா தனது விண்வெளிப் பயணத்தில் முதன்முறையாக அணுசக்தியைப் பயன்படுத்தியிருந்தாலும், நாசா ஏற்கனவே இதை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.