Paristamil Navigation Paristamil advert login

கமலுக்காக ஒன்றிணைந்த பிரபலங்கள்

கமலுக்காக ஒன்றிணைந்த  பிரபலங்கள்

2 கார்த்திகை 2023 வியாழன் 14:01 | பார்வைகள் : 7248


ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தடைகள் பல கடந்து உருவாகி வரும் படம் ‛இந்தியன் 2'. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைக்கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதில் உள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் அப்டேட்கள் வெளியாக துவங்கி உள்ளன. நாளை(நவ., 3) படத்தின் அறிமுக வீடியோ வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடுகின்றனர். அதன்படி தமிழ் பதிப்பை, நடிகர் கமலின் நெருங்கிய நண்பரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான ரஜினிகாந்த் நாளை மாலை 5:30 மணியளவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

தெலுங்கு பதிப்பை பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி, ஹிந்தி பதிப்பை நடிகர் அமீர்கான், கன்னட பதிப்பை கிச்சா சுதீப், மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் அதே நேரத்தில் வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பை தனித்தனி போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். அந்த போஸ்டர்களின் பின்னணியில் உள்ள பிரபலங்கள் 90 காலக்கட்டத்தில் எப்படி இருந்தனரோ அந்த போட்டோவை வெளியிட்டுள்ளனர்.

இந்தியன் படத்தின் முதல்பாகம் 1996ல் வெளியானது. தற்போது இரண்டாம் பாகம் 27 ஆண்டுகளுக்கு பின் உருவாகி வருகிறது. அதை குறிக்கும் வகையில் போஸ்டரில் 96, 23 என குறிப்பிட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்