ரஜினிக்கு எதிராகப் பேசினாரா ரத்னகுமார்?
2 கார்த்திகை 2023 வியாழன் 14:06 | பார்வைகள் : 3190
மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார், மாஸ்டர், விக்ரம் லியோ உள்ளிட்ட படங்களுக்கு எழுத்தாளாராகவும் பணிபுரிந்து உள்ளார்.
லியோ படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.1) நடைபெற்றது. இவ்விழாவில் இதில் விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், ரத்னகுமார் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.
அதில் ரத்னகுமார் பேசும் போது, ‘எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே இறங்கி வந்தாக வேண்டும்’ எனத் குறிப்பிட்டார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை ரஜினி பேசியிருந்த நிலையில், ரஜினியை தாக்கி பேசியதாக ரத்னகுமாருக்கு எதிராக கடும் விமரிசனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், ரத்னகுமார் அவரது எக்ஸ் பக்கத்தில் அடுத்தப்பட அறிவிப்பு வரும்வரை சமூக ஊடங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
ரத்னகுமார் நேற்று பேசியதற்கு தொடர்ந்து அவர் மீது விமரிசனங்கள் தொடர்ந்து வருவதால்தான் சமூக ஊடங்களில் இருந்து விலகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.