கனடாவில் அறிமுகமாகும் நேர மாற்றம்
3 கார்த்திகை 2023 வெள்ளி 07:03 | பார்வைகள் : 4176
கனடாவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவது வழமையானதாகும்.
எதிர்வரும் 5ம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 5ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் பருவ மாற்றம் காரணமாக ஒரு மணித்தியாலம் முன்நோக்கி நகர்த்தப்பட்டது.
இந்த நேர மாற்றம் எமது அன்றாட நடவடிக்கைகளில் சிறு சிறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நித்திரையில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணித்தியால நேர மாற்றமானது பாரியளவில் உடலியல் தாக்கத்தை ஏற்படுது;தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.