இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஹமாஸ்
3 கார்த்திகை 2023 வெள்ளி 07:17 | பார்வைகள் : 4043
இஸ்ரேல் ராணுவ வீரர்களை பைகளில் அனுப்புவோம் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வருகின்றது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில்,
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காசா பகுதியை சுற்றிவளைத்து விட்டார்கள்.
இனி போர் நிறுத்துவதற்கான பேச்சுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காசாவை சூழ்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை பைகளில் திருப்பி அனுப்புவோம் என ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.