Paristamil Navigation Paristamil advert login

அனிருத் `லியோ’ வெற்றி விழாவை புறக்கணிக்க காரணம் என்ன?

அனிருத் `லியோ’ வெற்றி விழாவை புறக்கணிக்க  காரணம்  என்ன?

3 கார்த்திகை 2023 வெள்ளி 09:16 | பார்வைகள் : 2304


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த, ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'லியோ' படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பலரும் பேசினார்கள். ஆனால், விழாவுக்கு இசையமைப்பாளர் அனிருத் வராமல் போனது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் வெளியூரில் இருக்கிறார், அதனால் தான் வரவில்லை என்று சொல்கிறார்கள்.

அதேபோல, ‘லியோ’ படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் அனிருத்தின் இசை. அவரது இசையும் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது. ‘ஜெயிலர்’ பட வெற்றிவிழாவில் கூட ரஜினிகாந்த் அனிருத்தின் இசையால்தான் படம் தப்பித்தது என பேசியிருந்தார். இந்த நிலையில், ‘லியோ’ வெற்றி விழாவில் அனிருத் பங்கேற்கவில்லை.

இதற்குக் காரணம் அவரிடம் அடுத்தடுத்த பெரிய படங்கள் கைவசம் உள்ளது. இந்த பணிகள் காரணமாகவே அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்