Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் எரிவாயுவின் அதிகரிக்கப்பட்ட புதிய விலைகள் அறிவிப்பு

இலங்கையில் எரிவாயுவின் அதிகரிக்கப்பட்ட புதிய விலைகள் அறிவிப்பு

4 கார்த்திகை 2023 சனி 06:50 | பார்வைகள் : 5074


இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் (Muditha Pieris) இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 95 ரூபாயால் அதிகரித்துள்ள நிலையில், புதிய விலை 3,565 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது

5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 38 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1,431 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேவேளை, 2.3 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 668 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்