காசா மருத்துவமனை அருகே இஸ்ரேல் தாக்குதல்

4 கார்த்திகை 2023 சனி 09:31 | பார்வைகள் : 7421
காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனை அருகே அவசர மருத்துவ உதவி வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியளித்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஸாவிலிருந்து காயமடைந்தோரை ராஃபா எல்லை நோக்கி அழைத்துச்சென்றபோது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது.
குறித்த வாகனங்கள் ஹமாஸ் பயன்படுத்தும் வாகனங்கள் என அடையாளம் காணப்பட்டதால் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
சென்ற மாதம் (அக்டோபர் 2023) 7ஆம் திதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 1400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.
அதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலியத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,000த்தைத் கடந்துள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025