Paristamil Navigation Paristamil advert login

Apple-ன் புதிய IMac வெளியான சிறப்பம்சங்கள்

Apple-ன் புதிய IMac வெளியான சிறப்பம்சங்கள்

4 கார்த்திகை 2023 சனி 09:40 | பார்வைகள் : 1940


தொழில்நுட்ப ஜாம்பவான்களின் ஒன்றான Apple நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக புதிய iMac கணினியை வெளியிட்டுள்ளது. புதிய M3 சிப் கொண்ட மாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

M3 சிப்புடன் கூடிய iMac ஆனது முந்தைய தலைமுறை M1 சிப்பை விட இரண்டு மடங்கு வேகமாக உள்ளது. இந்தியாவில் 8-கோர் GPU கொண்ட iMac இன் விலை ரூ. 134900 இல் தொடங்குகிறது. கல்விப் பிரிவில், ரூ.129900-க்கு கிடைக்கும். இது பச்சை, இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் சில்வர் வண்ண வகைகளில் கிடைக்கிறது.

இதன் மற்ற முக்கிய அம்சங்களில் 8-கோர் CPU, 8GB ஒருங்கிணைந்த நினைவகம், 256GB SSD, இரண்டு தண்டர்போல்ட் போர்ட்கள், ஒரு மேஜிக் கீபோர்டு மற்றும் ஒரு மேஜிக் மவுஸ் ஆகியவை அடங்கும்.

மறுபுறம், 10-Core GPU உடன் iMac ரூ.154,900-ல் தொடங்குகிறது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, ஊதா, நீலம் இது வெள்ளி வண்ணங்களில் கிடைக்கிறது.

இது 11.3 மில்லியன் பிக்சல்கள் மற்றும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்கள் கொண்ட மேம்பட்ட 4.5K ரெடினா டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

புதிய iMac-ன் மற்ற அம்சங்களில் வேகமான வயர்லெஸ் இணைப்பு மற்றும் iPhone உடன் தடையற்ற அனுபவம் ஆகியவை அடங்கும். இது சிறந்த கேமரா, ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்குகளை மேகோஸ் சோனோமாவுடன் இணைக்கிறது.

புதிய iMac கணினி குடும்பங்கள் முதல் சிறு வணிகங்கள், படைப்பாளிகள், மாணவர்கள் மற்றும் விளையாட்டாளர்கள் வரை அனைவருக்கும் சரியான கேஜெட்டாகும். கேஜெட்டை ஆர்டர் செய்து சொந்தமாக்குவதற்கான வாய்ப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தியாவில் நவம்பர் 7-ஆம் திகதி முதல் கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்