Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் தாக்குதல் : பிரெஞ்சு மக்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

ஹமாஸ் தாக்குதல் : பிரெஞ்சு மக்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

4 கார்த்திகை 2023 சனி 16:24 | பார்வைகள் : 8584


இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையில் 35 பேர் கொல்லப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, மொத்தமாக 39 பேர் ஹாசா பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒன்பது பேர் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, காணாமல் போனவர்களில் “அவர்களில் சிலர் ஹமாஸின் பணயக்கைதிகள் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்