Val-de-Marne : தலையில் Plastique பொதியினால் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் மீட்பு!

4 கார்த்திகை 2023 சனி 18:00 | பார்வைகள் : 9532
தலையில் ப்ளாஸ்டிக் (plastique) பை ஒன்று சுற்றிக்கட்டப்பட்ட நிலையில், ஐந்து வயது சிறுவன் ஒருவன் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பில் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை நண்பகல் நபர் ஒருவர் Choisy-le-Roi நகர காவல்நிலையத்துக்கு வருகை தந்துள்ளார், அவர் ‘சிறுவன் ஒருவனைக் கொலை’ செய்துவிட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து அவர் தெரிவித்த முகவரியில் உள்ள வீட்டுக்குச் சென்று பார்த்ததில் அங்கு ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் தலையில் ப்ளாஸ்டிக் பொதியினால் சுற்றி தலையில் கட்டப்பட்டு மூச்சுத்திணறலுடன் இருந்துள்ளான்.
உடனடியாக காவல்துறையினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
காவல்நிலையத்துக்கு வருகை தந்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1