Paristamil Navigation Paristamil advert login

மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை! - தோல்வி!

மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை! - தோல்வி!

4 கார்த்திகை 2023 சனி 19:00 | பார்வைகள் : 3256


பிரதமர் Elisabeth Borne இன் அரசாங்கம் மீது எதிர்க்கட்சிகள் இணைந்து கொண்டுவந்திருந்த நம்பிக்கை இல்லாத் பிரேரணை தோல்வியில் முடிந்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டம் (budget de la Sécurité sociale ) கடந்த இரு வாரங்களாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறதூ. பகுதி பகுதியாக கொண்டுவரப்படும் இந்த வரவு செலவுத் திட்டத்தினை பிரதமர் 49.3 எனும் அரசியலமைக்கு சட்டத்தை பயன்படுத்தி வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றினார்.

இதனைக் கண்டித்த எதிர்க்கட்சியினர், மக்ரோனின் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்திருந்தனர். கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை நம்பிக்கை இல்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, இன்று சனிக்கிழமை நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 89 ஆதரவு வாக்குகள் மட்டுமே பதிவாகின. நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க மொத்தமாக 289 வாக்குகள் தேவை (பாதிக்கும் மேல்). இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

அதேவேளை, இந்த சமுக பாதுகாப்புக்கான வரவு செலவுத் திட்டத்தினை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்த கட்டமாக இது செனட் மேற்சபையில் வாசிக்கப்பட உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்