யூத பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்! - விசாரணைகள் ஆரம்பம்!!
5 கார்த்திகை 2023 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 3951
யூத மதம் மீதான எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், யூத மதத்தினர் மீதான தாக்குதல்களும் அங்கங்கே பதிவாகி வருகிறது. நேற்று சனிக்கிழமை Lyon (Rhône) நகரில் யூத பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
லியோனின் 3 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் பெண் ஒருவரை நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். அடி வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்து மருருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ”இந்த செயல் யூத-விரோத நோக்கத்தால் தூண்டப்பட்டிருக்கலாம்!” லியோன் அரச வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் வீட்டின் கதவில் ஸ்வாஸ்திகா (*swastika ) இலட்சணை வரையப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
**
*ஸ்வாஸ்திகா என குறிப்பிடப்படும் இலட்சினையானது யூதர்களுக்கு எதிரான, நாஸிப்படையினரின் அடையாளம் ஆகும்.