காவல்துறையினரை விரைவாக அழைக்க - பாடசாலைகளில் அவசர அழைப்பு வசதி!
6 கார்த்திகை 2023 திங்கள் 08:11 | பார்வைகள் : 4554
அவசர சூழ்நிலைகளின் போது காவல்துறையினரை அழைக்கக்கூடியவாறு பாடசாலைகளில் அவசர அழைப்பு பொத்தான் ஒன்று நிறுவும் திட்டமொன்றை பிரதமர் முன்மொழிந்துள்ளார்.
சில பாடசாலைகளில் இந்த வசதி உள்ளது. சில தனியார் நிறுவனங்களில் கூட உள்ளது. ஆனால் இதனை அனைத்து பாடசாலைகளிலும் கட்டாயமான ஒன்றாக மாற்றும் திட்டம் ஒன்று குறித்து பிரதமர் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை காலை France Inter வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர், அதன் போதே இதனைத் தெரிவித்தார்.
.@Elisabeth_Borne : "Le gouvernement est totalement mobilisé pour assurer la sécurité sur l'ensemble du territoire, et notamment autour des écoles" après l'attentat d'Arras #le710Inter pic.twitter.com/jUPQBAa2ah
— France Inter (@franceinter) November 6, 2023
Arras தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், “இதுபோன்ற தாக்குதலுக்கு எதிராக அரசாங்கம் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளது!” எனவும் தெரிவித்தார்.