மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரிக்கும் பதற்றம்
6 கார்த்திகை 2023 திங்கள் 09:14 | பார்வைகள் : 4932
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போராடவும், தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்ளவும் இஸ்ரேலுக்கு முழு உரிமை இருப்பதாக அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியது.
அத்துடன் 2 விமானம் தாங்கி போர் கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அவரச கதியில் அமெரிக்கா அனுப்பி வைத்தது.
மேலும் இஸ்ரேலுக்கான ஆதரவை உலக நாடுகளுக்கு வலுவாக வெளிப்படும் வகையில், போர் தீவிரமாக நடைபெற்று வரும் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விஜயம் செய்தார்.
இதற்கு மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.
பிரித்தானியாவும் தங்களது போர் கப்பலை இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்கு தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், அமெரிக்கா தங்களது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை மத்திய கிழக்கு நாடுகளின் கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை தெரிவித்துள்ள தகவலில், மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்காவின் ஓஹியோ வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை அனுப்பி இருப்பதாக அறிவித்துள்ளது.
அத்துடன் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை ஒரு அறிக்கையில், ஓஹியோ-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் நவம்பர் 5 ஆம் திகதி மத்திய கிழக்கு தரைக்கடல் பகுதிக்கு சென்று சேர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளது.