Paristamil Navigation Paristamil advert login

காசாவில் பரவி வரும் தொற்று நோய்.... ஐ.நா பகீர் தகவல்

காசாவில் பரவி வரும் தொற்று நோய்.... ஐ.நா பகீர் தகவல்

6 கார்த்திகை 2023 திங்கள் 09:30 | பார்வைகள் : 5067


இஸ்ரேல் - ஹமாஸ் போர் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் காசாவில் தொற்று நோய் பரவி வருவதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.

காசாவில் சுவாச தொற்று நோய்கள், வயிற்றுப்போக்கு, அம்மை உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருகின்றது.

மக்கள் இடமின்றி வீதிகளில் உறங்கி வருவதாகவும், புதிதாக வருவோருக்கு ஐ.நா பாதுகாப்பு இடங்களில் இடமில்லை எனவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 

நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் போர் காசா இதுவரை சந்தித்திராத அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் போரை நிறுத்தக்கோரி ஐ.நா.வும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து இஸ்ரேலிடம் வலியுறுத்தி வருகின்றன.

எனினும் அதை திட்டவட்டமாக நிராகரித்து வரும் இஸ்ரேல் ஹமாசை ஒட்டு மொத்தமாக ஒழிக்கும் இறுதி இலக்கை எட்டும் வரை போர் தொடரும் என கூறி வருகிறது.

அதுமட்டுமல்லாது தரை, கடல், வான் என 3 வழிகளில் இருந்தும் காசாவை இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருகிறது. 

இந்த மும்முனை தாக்குதலில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது.

பூமியின் நரகம் என்று கூறும் அளவுக்கு காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. 

இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்று நோய் பரவி வருவதாக பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் சார்பான பாதுகாப்பு இடங்களில் சுமார் 5 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், கூட்டம் அதிகம் இருப்பதால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்