Paristamil Navigation Paristamil advert login

ஆண்டின் கடைசி மாதங்களில் பெண்கள் இலவசமாகவே வேலை செய்கிறார்கள் "Les Glorieuses".

ஆண்டின் கடைசி மாதங்களில் பெண்கள் இலவசமாகவே வேலை செய்கிறார்கள்

6 கார்த்திகை 2023 திங்கள் 09:45 | பார்வைகள் : 7734


நவம்பர் 06  திங்கட்கிழமை காலை 11:25 மணி முதல், ஆண்டின் இறுதி வரை பெண்கள் "இலவசமாக வேலை செய்ய தொடங்குகிறார்கள்" என கடந்த எட்டு ஆண்டுகள் நடத்திய ஆய்வில் இந்த முடிவை எடுத்திருக்கிறது பெண்ணியம் சார்ந்த இணையவழி செய்தி ஊடகமான  "Les Glorieuses".

ஆண்களைக் போல் சமமான வேலை செய்யும் பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை, ஆண்களின் ஊதியத்தேடு ஒப்பிடுகையில் பெண்கள் ஆண்டொன்றுக்கு 15.4% சதவீதம் குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள் என தெரிவித்துள்ள "Les Glorieuses" ஊடகம், இந்த குறைவான ஊதியத்தை ஒப்பிட்டால் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் 06ம் திகதியில் இருந்து டிசம்பர் 31 திகதிவரை இலவசமாகவே வேலை செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளது.

ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான ஊதியம் பெறும் நிலை பிரான்சில் 2% அல்லது 3% சதவீதத்தால் குறைவாக இருந்தாலும் முழுமையான மாற்றம் வரவேண்டும் என தாம் வாதிடுவதாகவும் குறித்த இணையவழி பத்திரிகை தெரிவித்துள்ளது.

மார்ச் 8 திகதியிட்ட நீதிமன்ற தீர்ப்பில் "ஆண்களைக் போல் சம பதவி வகுக்கும் ஒரு பெண், ஆணைப் போன்ற ஆதே ஊதியத்தை நிறுவனத்திடம் உரிமையுடன் கோரலாம் " என்னும் சட்டம் இருக்கிறது என்பதை பெண்கள் மறந்விடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்