அமெரிக்காவில் இருந்து இத்தாலி, ஸ்பெயின் வழியாக பிரான்சில் பரவியது புதிய வைரஸ்.
6 கார்த்திகை 2023 திங்கள் 10:37 | பார்வைகள் : 4803
1955ம் ஆண்டில் புதிய வகை வைரஸ் ஒன்று அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. காய்ச்சல், பசியின்மை, சுவாசக் கோளாறு, மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படும் குறித்த வைரஸ், இறப்பைக்கூட ஏற்படுத்தக் கூடியது. அமெரிக்காவில் இருந்து இத்தாலி, ஸ்பெயின் வழியாக ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருவதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய சுகாதார அமைப்பு. தாம் 2022ம் ஆண்டில் இருந்து மிகவும் உண்ணிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பிரான்சின் Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Gers, Landes மற்றும் Haute-Garonne. பகுதிகளில் குறித்த வைரசின் தாகம் முதல் முதலாக கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக காடுகளில் வாழும் மான்கள், ஆடுகளில் காணப்பட்ட வைரஸ் தொற்று. பண்ணைகளுக்கும் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் குறித்த பகுதிகளில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இருந்து விலங்குகளை இறைச்சிக்காகவோ, ஏனைய தேவைகளுக்காகவோ ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைரஸ் நுளம்புகள் மூலம் பரவும் எனவும், விலங்குகளை தாக்குமே தவிர மனிதர்களுக்கு இதனால் எந்தவிதமான ஆபத்துகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேசிய உணவு பாதுகாப்பு நிறுவனம் (ANSES) இறைச்சிக்காக வரும் அனைத்து விலங்குகளை பரிசோதிக்க பரிந்துரைத்து இருக்கிறது.