Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சிறுவர்களுக்கு மாரடைப்பு அபாயம்

இலங்கையில் சிறுவர்களுக்கு மாரடைப்பு அபாயம்

7 கார்த்திகை 2023 செவ்வாய் 04:34 | பார்வைகள் : 6833


இலங்கையில் சிறுவர்களுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை பிள்ளைகள் மத்தியில் உடல் எடை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சுகாதார விஞ்ஞானப் பிரிவின் போசாக்கு அலகு பிரதானி வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அநேகமான மாணவ மாணவியர் சந்தையில் விற்பனை செய்யப்படும் முறுக்கு, வடை, ரோல்ஸ், பெட்டிஸ், டோனட், கேக் உள்ளிட்ட உணவு வகைகளை உட்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனி, எண்ணெய் போன்றன அதிகளவில் செறிவான உணவுப் பொருட்களை உட்கொள்வதனால் சிறு வயதிலேயே பாரிய ஆபத்துகளை எதிர்நோக்க நேரிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்த வயதிலேயே சிலருக்கு மாரடைப்பு, நீரிழிவு நோய்கள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகள் எண்ணெய் மற்றும் சீனி செறிந்த உணவுகளை வகைகளை தவிர்க்க வேண்டும் எனவும், உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்