Paristamil Navigation Paristamil advert login

சூர்யா - அமீர் சண்டைக்கு காரணம் இதுவா?

சூர்யா - அமீர் சண்டைக்கு  காரணம் இதுவா?

7 கார்த்திகை 2023 செவ்வாய் 12:37 | பார்வைகள் : 2619


அமீர் தனது சொந்த தயாரிப்பில் பருத்திவீரன் திரைப்படத்தை முடித்து சென்சாரும் வாங்க, படம் குறித்து கேள்விப்பட்ட பலரும் படத்தை வியந்து பாராட்ட இந்த திரைப்படத்தை தனது ஸ்டூடியோகிரின் நிறுவனத்தின் பெயரில் வெளியிட முன்வருகிறார் ஞானவேல். தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு சென்சார் ஞானவேலுக்கு மாற்றப்படுகிறது. படம் வெற்றிகரமாக ஓடும் பட்சத்தில் வெற்றி பணத்தில் ஒரு தொகை அமீருக்கு வழங்கப்படும் என பேசி முடிக்கப்படுகிறது.

திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பேசியபடி அமீருக்கு பணம் வரவில்லை என அமீர் தனக்கான நியாயத்தைக் கேட்க தயாரிப்பாளரான ஞானவேலுக்கும் இயக்குனர் அமீருக்கும் இடையே சில பிரச்சனை வலுக்கிறது. இதை சரி செய்ய வந்த சூர்யா தயாரிப்பாளர் ஞானவேல் பக்கம் நிற்கிறார். அமீருக்கு கோபம் இன்னும் அதிகரிக்க பிரச்சனை சூர்யாவிற்கும் அமிருக்கும் இடையே நேரடியாக மாறுகிறது.

சூர்யாவின் வேண்டுகோளை ஏற்று திரைப்படத்திற்குள் வந்து கார்த்தியை நடிகனாக உருவாக்கி விட்ட தன் பக்க நியாயத்தை சூர்யா கேட்கவில்லை என பிரச்சனையை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற அமீர் இப்பொழுதும் நீதிமன்றத்திற்கு அவர் மட்டும் சென்று வருகிறார்.

அமீர் நீதிமன்றம் சென்றதும், இந்த பிரச்சனையில் உள்ள சிக்கலும் சூர்யா,கார்த்தி, சிவகுமார் உள்ளிட்டவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? தெரிந்தும் ஏன் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்ற கோபம் அமீர்வசம் அப்படியே தொடர்கின்றன.

விகடன் மேடையில் நன்றி சொன்னது, அமீரின் தாயார் மரணத்தின் போது கார்த்தியை அனுப்பியது என சூர்யாவும் சமாதான முயற்சிகளை அவ்வப்போதும் முன்னெடுத்தாலும் நேரடியாக பிரச்சினையை அமர்ந்து பேசி முடிக்கும் வரை சமாதானமாக போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் அமீர்.

இந்த நிலையில் ஜப்பான் படத்தில் கார்த்தியை இயக்கிய அத்தனை இயக்குனர்களும் மேடையில் திரள அமீர் மட்டும் மேடையில் இல்லை அமீருக்கு விழாவில் சூர்யா நன்றி தெரிவித்த போதும் கூட அவரை அழைக்காதது ஏன் என்று கேள்வி இருந்தது.

அமீர் தயாரித்துள்ள மாயவலை விழாவில் இதுகுறித்த கேள்வியை அமீரிடம் எழுப்பிய போது அழைக்காத திருமணத்திற்கு செல்லும் பழக்கம் எனக்கு எப்போதும் இல்லை என பதில் சொன்னார். உண்மையில் கார்த்தி தரப்பிலிருந்து அமீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற ஆய்வில் இறங்கினோம்.

ஜப்பான் திரைப்படத்தில் கார்த்தியின் வெற்றிக்கு துணை நின்ற இயக்குனர்கள் அத்தனை பேரையும் மேடை ஏற்ற முடிவு செய்தவுடன் அமீருக்கு அழைத்திருக்கிறார்கள் பட தயாரிப்பு நிறுவனம். ஆனால் தயாரிப்பு நிர்வாக அதிகாரி அமீரிடம் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு நேரில் அழைப்பு விடுக்க காத்திருக்கிறார் என சொன்னதும் அமீருக்குள் இருந்த கோபங்கள் வெளிப்பட்டு இருக்கிறது.

கார்த்தி அழைக்க சொன்னாரா? கார்த்தி ஏன் அழைக்கவில்லை? நான் உயிரோடு இருக்கிறேன் என கார்த்திக்கு தெரியுமா?
அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கி இருக்கிறார் அமீர்.

அத்தோடு ஜப்பான் விழாவிற்கு அமீரை அழைக்கும் எண்ணத்தை கைவிட்டு இருக்கிறது பட தயாரிப்பு நிறுவனம். சூர்யா, கார்த்தி அல்லது சிவகுமார் யாரேனும் ஒருவர் அமீருடன் அமர்ந்து பேசினால் ஐந்து நிமிடத்தில் முடிய வேண்டிய பிரச்சனை 16 ஆண்டுகள் கடந்து இன்னமும் அதே அனலோடு தகித்துக் கொண்டே இருக்கிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்