Paristamil Navigation Paristamil advert login

Seine-Saint-Denis : விற்பனையாளர் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறையினர்!!

Seine-Saint-Denis : விற்பனையாளர் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறையினர்!!

7 கார்த்திகை 2023 செவ்வாய் 13:33 | பார்வைகள் : 4751


இரு வீதி விற்பனையாளர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை அடுத்து காவல்துறையினர் விற்பனையாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

மாலை 7 மணி அளவில், Quatre-Chemins பகுதியில் இரு வீதி விற்பனையாளர்கள் (சிறிய பொருட்களை வீதிகளில் வைத்து விற்பனையில் ஈடுபடும் வணிகர்கள்) மோதலில் ஈடுபட்டனர். இருவரும் சிகரெட் விற்பனை செய்பவர்கள் என அறிய முடிகிறது. இந்த மோதல் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர்.

ஆனாலும் மோதல் நிற்பதாக தெரியவில்லை. இருவரும் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட, காவல்துறையினரின் ஒருவர் அவர்கள் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் இருவரில் ஒருவர் காயமடைய, மோதல் முடிவுக்கு வந்தது. காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இருவரில் ஒருவர் Pantin நகரைச் சேர்ந்தவர்.இரண்டாமவர் Aubervilliers நகரைச் சேர்ந்தவராவார். இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்துவந்த பகை உணர்வு நேற்று மோதலாக வெடித்ததாக அறிய முடிகிறது.

அதேவேளை, காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணைகளை காவல்துறையினரைக் கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN - விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்