Paristamil Navigation Paristamil advert login

2025ம் ஆண்டில் வெளியாகும் சிம்பு 48வது படம்.?

2025ம் ஆண்டில் வெளியாகும் சிம்பு 48வது படம்.?

8 கார்த்திகை 2023 புதன் 08:10 | பார்வைகள் : 2343


தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும் இன்னும் இதன் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஜனவரி மாதத்தில் துவங்குவதாக தகவல் வெளியாக உள்ளதாகவும் , இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகுவதால் இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ஒத்திகை படப்பிடிப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக இப்படம் 2025ம் ஆண்டில் தான் வெளியாக வாய்ப்பு உள்ளது என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்